Our Feeds


Saturday, June 3, 2023

ShortTalk

சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி - சூடான் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!



சூடானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, அமைதியை சீர்குலைத்தமைக்காக பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அப்தேல் பத்தாஹ் அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும் மொஹம்மத் ஹம்தான் டக்லோ தலைமையிலான, ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும்  மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகுவதாக சூடான் இராணுவம் நேற்று முன்தினம் அறிவித்தது. 

அதன்பின் சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த தாக்குதல்களில் 19 பேர் பலியானதுடன் 105 பேர் காயமடைந்தனர் என மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வன்முறைகள் நீடிப்பதற்கு காரணமானவர்களுக்கு பொருளாதாரத் தடைகளையும், விசா கட்டுப்பாடுகளையும்  அமெரிக்கா விதிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் கூறியுள்ளார்.

4 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளளது. இவற்றில் இரு நிறுவனங்கள் சூடான் இராணுவத்துடன் தொடர்புடையவை. 

ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையின் தளபதி டக்லோ மற்றும் அவரின் இரு சகோதரர்களினால் நடத்தப்படும் இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.  

சூடானில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும் மோதல்களால் குறைந்தபட்சம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »