தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு
ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலையை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
