Our Feeds


Saturday, June 10, 2023

ShortNews

MP பதவியை இராஜினாமா செய்தார் முன்னாள் பிரதமர் - தொகுதிக்கு விரைவில் தேர்தல்!



இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. 


அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரிவிக்கையில்,


பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது.


அதுவும் தற்போதைய நிலையில்... சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.


விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »