Our Feeds


Friday, July 28, 2023

SHAHNI RAMEES

குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில்....

 

 

மதவாச்சி, கடவத்கம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடவத்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலதிக வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த பாடசாலையில் இருந்த குளவிக்கூட்டை குரங்குகள் கலைத்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த மாணவர்களில் 10 ஆண் பிள்ளைகளும் 7 பெண் பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை காயமடைந்த மாணவர்கள் 11 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட , கடவத்கம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.

 

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »