டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் 52,021 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும், மேல் மாகாணத்தில் 25,944 ற்கும் அதிகளவானோர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)