Our Feeds


Wednesday, July 26, 2023

ShortNews Admin

காத்தான்குடி பொலிஸார் பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்



காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இது குறித்து மிக அவதானமாக இருக்குமாறு காத்தான்குடி பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.


இதன் காரணமாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரங்களில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் திருடிவருகின்றனர்.

இதனால் வீடுகளை விட்டு வெளியில் செல்லும் போது வீடுகளில் ஆட்களை இருத்தி விட்டுச் செல்லுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேபோல் நமது பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளமையாலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வீதிகளில் நடமாடும் ஐஸ் மற்றும் போதைப் பாவரனையார்ளர்கள் தொடர்பான தகவல்களையும் பொதுமக்களாகிய நீங்கள் பொலிசாருக்கு அறியத்தரும் படியும் பொலிசார் வேண்டுகோள் விடுக்கிள்றனர்.

திருட்டுச் சம்பவங்களையும் போதைப் பொருள் பாவனையையும் வெறுமனே பொலிசாரினால் மாத்திரம் ஒழித்துவிட மயடியாது பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே இக்குற்றச் செயல்களை ஒழிக்க முடியும.

எனவே பொதுமக்களின்  பூரண ஒத்துழைப்பை பொலிசார் எதிர்பார்க்கின்றனர் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.காரியவசம் (தொலைபேசி இலக்கம்-0652246595) மற்றும் குற்றத்தடுப்பு பொறுப்திகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் (அலைபேசி இலக்கம்-0777142247) ஆகியோர் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »