பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.