‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட – மாண்புமிகு மலையக மக்கள்’ என்ற தொனிப்பொருளிலான தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபயணம் இன்று(28) முதல் ஆரம்பமாகவுள்ளது. தலைமன்னாரில் இன்று ஆரம்மாகும் இந்த நடைபவணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மாத்தளையில் நிறுசெய்யப்படவுள்ளது. 16 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நடைபவணி இடம்பெறவுள்ளது.
மொத்தமாக 262 கிலோ மீட்டர் தூரம் வரையில் பயணிக்கவுள்ள இந்த நடைபயணம், மலையக மக்களின் 200 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
தலைமன்னாரில் இன்று ஆரம்பித்து, நாளை (29) தலைமன்னாரிலிருந்து பேசாலை வரையிலும், 30 ஆம் திகதி பேசாலை முதல் மன்னார் வரையிலும், 31 ஆம் திகதி மன்னார் நகரிலிருந்து முருங்கன் வரையிலும், முதலம் திகதி முருங்கனிலிருந்து மடு வரையிலும், 3 ஆம் திகதி மடு சந்தியிலிருந்து செட்டிக்குளம் வரையிலும், 4 ஆம் திகதி செட்டிக்களுத்திலிருந்து மதவாச்சி வரையிலும், வவுனியா முதல் மதவாச்சி வரையிலும் நடைபவனி இடம்பெறவுள்ளது.
மேலும், 06 ஆம் திகதி மதவாச்சி முதல் மிகிந்தலை வரையிலும், 7 ஆம் திகதி மிகிந்தலை முதல் திரப்பனை வரையும், 8 ஆம் திகதி திரப்பனையிலிருந்து கெக்கிராவ வரையிலும், 9 ஆம் திகதி கெக்கிராவயிலிருந்து தம்புள்ளை வரையிலும், 11 ஆம் திகதி தம்புள்ளை முதல் நாலந்த வரையிலும், 12 ஆம் திகதி நாளாந்தாவிலிருந்து மாத்தளை வரையிலும் பயணிக்கவுள்ளது
