Our Feeds


Saturday, July 1, 2023

ShortNews

ராகம வைத்தியசாலையில் தடுப்பூசி மூலம் அன்டிபயோட்டிக் செலுத்தப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு! - நடந்தது என்ன?



கொழும்பு வடக்கு போதனா வைத்தியாசாலையில் ( ராகம) அன்டிபயோட்டிக் மருந்து வழங்கப்பட்ட 23 வயது யுவதி உயிரிழந்துள்ளார்.


27ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வாய்மூலம் பயன்படுத்துவதற்கான மருந்து வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது பலளனிக்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அதே மருந்தினை தடுப்பூசி மூலம் மருத்துவர் செலுத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து அந்த யுவதி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஓவ்வாமையினால் பாதிக்கப்பட்ட யுவதியை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாக ராகம வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். எட்டு மணித்தியாலங்கள் அவருக்கு தீவிரகிசிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது ஆனால் அவரை காப்பாற்றமுடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது வழமைக்கு மாறான சம்பவம் என தெரிவித்துள்ள ராகமவைத்தியசாலையின் இயக்குநர் நோயாளிகள் இவ்வாறான பாதிப்பினை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உயிரிழப்பை தொடர்ந்து குறிப்பிட்ட வகை மருந்தினை பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு நிறுத்தியுள்ளதுடன் அதனை மீளப்பெற்றுக்கொண்டுள்ளது.

மருந்துகள் செலுத்தப்பட்ட பின்னர் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »