Our Feeds


Saturday, July 1, 2023

SHAHNI RAMEES

#BREAKING: எரிபொருள் விலையில் மாற்றம்..!

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,அதன் புதிய விலை 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 365 ரூபாய் ஆகும்.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் அதிகரித்து ரூபாய் 346 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைந்து 308 ரூபாவாக காணப்படுகிறது.


அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைந்து 236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையான எரிபொருள் விலைகளை இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »