குறித்த விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாரவூர்தியின் பின்புறம் உள்ள பகுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.