Our Feeds


Sunday, August 13, 2023

Anonymous

ஒரே தோட்டத்தில் 20 ஆயிரம் கஞ்சா செடிகள் - 3 பேர் கைது

 



தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் 4 காணிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை உடவலவ விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை முற்றுகையிட்டு 5 அடி உயரம் கொண்ட 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்துள்ளதுடன் 3 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உடவலவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிலுள்ள 4 கஞ்சா தோட்டங்களை சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலையில் விசேட அதிரடிப் படையின் முற்றுகையிட்டுள்ளனர்.


இதன்போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் அங்கு 20 பேசர்ச் காணியில் 05'06' உயரம் கொண்ட 4358 கஞ்சா செடிகளும், 10 பேர்ச் காணியில் 05'09' உயரம் கொண்ட 2178 கஞ்சா செடிகளும்;, 30 பேர்ச் காணியில் 05' உயரம் கொண்ட 6751 கஞ்சா செடிகளும், 30 பேர்ச் காணியில் 04' 04' உயரம் கொண்ட 7387 கஞ்சா செடிகளுமாக 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளை அழித்துள்ளனர்.


இதில் கைது செய்யப்பட்டவர்களையும் சான்று பொருளாக கஞ்சா செடிகளையும் தம்மிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  ஹம்பேகமுவ பொலிஸ் தெரிவித்துள்ளனர்.


-கனகராசா சரவணன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »