ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 2.18 சதவீதத்தால் அதாவது 1,027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின் அடிப்படையில், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 2.18 சதவீதத்தால் வருமானம் அதிகரித்துள்ளதுடன், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 11.79 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆடை, துணி மற்றும் இறப்பர் உள்ளிட்ட தயாரிப்புகள் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி குறைந்தமை கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி வருமான வீழ்ச்சிக்கு காரணமாகும் என்று தெரியவருகிறது.