ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நேற்று மாலை தனது உறவினருடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.