Our Feeds


Sunday, August 13, 2023

Anonymous

கம்பஹா தடுப்பூசி மரணம் - கடுமையாக கோபப்பட்டு எழுந்து சென்ற சுகாதார அமைச்சர் - நடந்தது என்ன?

 



ஷேன் செனவிரத்ன


ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கேள்வி கேட்ட ஊடகவியலாளரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு, கடும் கோபமடைந்த நிலையில் இடையிலேயே எழுந்துச் சென்றுவிட்டார்.


கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.   

கண்டி குண்டசாலை கலா புரய பிரதேசத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்து கொண்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

அங்கு கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் ஊசி போட்டு உயிரிழந்த சம்பவம் அமைச்சருக்கு தெரியுமா என ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அமைச்சருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் இவ்வாறு உரையாடல் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர்- உங்களுக்கு யார் இப்படிச் சொன்னது?

பத்திரிக்கையாளர்- ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

அமைச்சர்- எப்படி உங்களுக்குத் தெரியும்.

  பத்திரிகையாளர்- ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

அமைச்சர்- சொன்ன மருத்துவர் யார்?

பத்திரிகையாளர் – இல்லை அவர் சொல்லவில்லை.

அமைச்சர்- அப்புறம் யார்? ஒரு மருத்துவரா? தெருவில் செல்லும் யாரோ? ஒருவரா? தெருவில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி என்றால் என்னவென்று தெரியாது.

பத்திரிக்கையாளர்- அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அமைச்சர்- சம்பவம் நடந்தது என்று யாராவது சொல்ல வேண்டும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக யார் சொன்னது? ஒரு மருத்துவரா? ஒரு பேராசிரியரா அல்லது   மருத்துவ நிபுணரா? எனக்கு தெரிய வேண்டும். எனக்கும் அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறதா என்று தெரிய வேண்டும்.

பத்திரிக்கையாளர்- எனது நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

அமைச்சர்- அவர் உங்கள் நண்பராக இருக்க முடியாது, அவர் வெறுப்பாளராக இருக்க வேண்டும். அதுதான் இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டுகின்றார்.

 பத்திரிக்கையாளர் - எனது சிறந்த நண்பர் ஒருவர் இதைப் பற்றி எனக்குத் தெரிவித்தார்.

அமைச்சர்- அவர் உங்கள் நண்பராகவே இருக்க முடியாது. வெறுப்பாளராக இருக்க வேண்டும். அவர்கள் உங்களை பழிவாங்கும் நபராக மாற்ற முயற்சிக்கிறார்கள். அதில் விழ வேண்டாம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது மருத்துவர்களுக்குத் தெரியும். ஒரு மருத்துவர் சொன்னால் உடனே நடவடிக்கை எடுப்பேன்.

மீண்டும் பத்திரிக்கையாளர்- என் சிறந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

 அமைச்சர்- அன்பே, யார் டாக்டரா அல்லது அயோக்கியனா? தெருவில் செல்லும் ஒரு மனிதனா? அவருக்கு தடுப்பூசிகள் பற்றி தெரியுமா? யாராவது சொன்னாரா? நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். குறைந்த பட்சம் ஒரு உதவியாளர் சொன்னாரா? கண்டுபிடித்து என்னிடம் கேள். என்று கூறிவிட்டு அமைச்சர் உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.


தமிழ் மிரர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »