அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி செய்யப்பட்ட பயனாளர்களுக்கு முதலாம் தவணை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஜி.விஜேரத்ன இராஜினாமா செய்தமையினால் நிதியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தாமதமானது.
எவ்வாறாயினும், புதிய தலைவராக ஜயந்த விஜேரத்ன பொறுப்பேற்றதையடுத்து, கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.