பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்ட கடனுதவியில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதில் நியதிமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரண்டாவது தொகையாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மூன்றாவது தொகையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டாவது கடன் தொகையை இலங்கை இந்த மாதத்துக்குள் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் மிஸ்பாஹுல் ஹக் கூறியுள்ளார்.
பங்களாதேஷிடமிருந்து இலங்கை பெற்ற 200 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தது.
2021 செப்டம்பரில் பொருளாதார நெருக்கடியிலிருந்த இலங்கைக்கு – பங்களாதேஷ் அரசு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியது.