Our Feeds


Saturday, August 26, 2023

Anonymous

போதைக்கு எதிரான நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கில் ஓட்டம் - புத்தளம் நப்சான் இன்று நுவரெலியாவை அடைகிறார்.

 



போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதிலும், போதைக்கு அடிமையாகுவதிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதிலும் துரிதமாக செயற்பட்டு வரும் புத்தளம் லகூன் அமைப்பின் உறுப்பினரான தில்லையடி எல்.ஏ.எம். நப்ஸானின் இலங்கை முழுவதற்குமான விழிப்புணர்வு சைக்கிள் சுற்றுப்பயணத்தின் 10 வது நாளின் நிறைவில் (24) அவர் கம்பளை நகரை அடைந்துள்ளார்.


இவர் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இருந்து கடந்த 15 ம் திகதி இலங்கை முழுவதற்குமான விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தார்.


லகூன் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இல்ஹாம் தலைமையில் புத்தளம் நகரசபை செயலாளர் எல்.பீ‌.ஜி. பிரீத்திகா மற்றும் உலமாக்கள், லகூன் அமைப்பின் அங்கத்தவர்கள், புத்தளம் வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இவரது பயணம் ஆரம்பமானது.


புத்தளம், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மாவட்டங்களை கடந்து தனது பயணத்தின் 10 வது நாளில் கம்பளையை அடைந்துள்ளார்.


வெள்ளிக்கிழமை (25) இவர் தனது சைக்கிள் பயணத்தை தொடராக மேற்கொண்டு கெலிஓயா கடந்து கண்டி நோக்கி பயணமாகியுள்ளார்.


போதைப்பொருள் பாவனையிலிருந்து இலங்கை வாழ் இளைஞர்களை மீட்டெடுத்தல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வேண்டி சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்தல், பயங்கர விபத்துகளில் இருந்து நாட்டு மக்களை பாதுகாத்தல் ஆகிய மூன்று விழிப்புணர்வு திட்டங்களை முன்வைத்து இவரது இந்த சைக்கிள் பயணம் ஆரம்பமாகியுள்ளது.


வெயில் மழை பாராமல், பகல் மற்றும் இரவு பாராமல் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் புத்தளத்தின் சாதனையாளனுக்கு அவர் சென்ற இடமெல்லாம் ஊர் தழுவிய ரீதியாக வரவேற்பும் வாழ்த்துக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.


இவரை வரவேற்று இலங்கை முழுவதும் அவருக்கான வாழ்த்துக்களையும், மரியாதைகளையும் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் புத்தளம் லகூன் அமைப்பு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது


புத்தளம் லகூன் அமைப்பினர் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »