Our Feeds


Thursday, August 31, 2023

News Editor

வாகனங்கள் வாங்குவோர் கவனத்திற்கு!!


 வாகனங்களை வாங்குகின்றவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை உள்நாட்டில் ஒழுங்கமைத்து தரமற்ற வாகனங்கள் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


அவ்வாறு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜீப் வண்டிகள் குருணாகலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டன.


கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் இந்த வாகனங்களை கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு இறக்குமதி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களுமே போலியானவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »