2023ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துக்கான இலங்கையின் தேயிலை உற்பத்தி மொத்தமாக 21.37 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பை காட்டுவதாகவும், ஃபோர்ப்ஸ் மற்றும் வோக்கர்ஸ் தேயிலை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
2022 ஜூலையில் தேயிலை உற்பத்தி 19.92 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்ட தேயிலை உற்பத்தி 2023 ஜூலையில் 21.37 மில்லியன் கிலோ கிராமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தேயிலை உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், 2021ஆம் ஆண்டு ஜூலை மாத்தில் 26.38 மில்லியன் கிலோ கிராமாக தேயிலை உற்பத்தி பதிவாகியிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.01 மில்லியன் கிலோ கிராம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.