Our Feeds


Thursday, August 24, 2023

Anonymous

நாட்டுக்குள் ISIS ஊடுருவலா? உடனடியாக விசாரணை நடத்துமாறு உலமா சபை கோரிக்கை

 



நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக சமிந்த விஜேசிறி எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் தீவிரமாக தேடிப்பார்க்குமாறும் முறையான நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. 


அந்தக் கடிதத்தில் மேலும், 2023.08.23ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்தின் போது சமிந்த விஜேசிறிவி எம்.பி. , ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் குண்டுதாரிகள் எமது நாட்டில் இருப்பதாகவும் அதுதொடர்பில் வஜிர அபேவர்தன எம்.பியும் அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.



கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களினால் எமது நாட்டில் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது என்பதை நாங்கள் அறிவோம். 



ஒரு குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னரே எங்களுக்கு கிடைத்த தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தபோதும், அதுதொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்காமை அல்லது தேடிப்பார்க்காமையின் காரணமாக கிறிஸ்தவ மக்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த மக்களும் பாதிப்படைந்திருந்தனர் - என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நுராமிதினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »