காலி சிறைச்சாலையில் உயிரிழந்த இரண்டு கைதிகளும் மெனிங்கோகோகஸ் என்ற பக்டீரியா தொற்று ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு முன்னெடுத்த முதற்கட்ட விசாரணைகளின்
படி மெனிங்கோகோகஸ் பக்டீரியா தொற்று ஏற்பட்டு மெனிங்கோகோகஸ் நோய் தாக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் ஐவர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு காலி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.