Our Feeds


Saturday, August 19, 2023

SHAHNI RAMEES

#VIDEO: வாக்காளர் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு...!

 

தகுதியான வாக்காளர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.



எவரும் www.elections.gov.lk இணையத்தளத்திற்குச் சென்று விபரங்களைச் சரிபார்க்கலாம். தகவல்களைச் சரிபார்க்க தனிநபர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.





தேருநர் பதிவேட்டில் இருந்து தகுதியான வாக்காளர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால், செப்டம்பர் 4 ஆம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.



2005 ஜனவரி 31 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் 18 வயது நிரம்பியவர்கள், 2023 இல் தங்கள் வழக்கமான குடியிருப்பு முகவரியில் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »