Our Feeds


Thursday, September 14, 2023

ShortTalk

தங்க மகன் மீது மற்றொரு குற்றச்சாட்டு | அரச காணியை 14 வருடமாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வரும் அலி சப்ரி ரஹீம் MP



புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.


புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து வௌிப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



எவ்வாறாயினும், சுமார் 14 வருடங்களாக இந்தக் காணியிலிருந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படாமையால் சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.



இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிந்தக மாயதுன்ன தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »