ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஐபோன் 15 கையடக்க தொலைபேசி தொடர்பில் குறைபாடுகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதனத்தை பயன்படுத்தும்போதோ அதற்கு மின்னூட்டம் செய்யும் போதோ ஐபோன் மிகவும் சூடாகிவிடுவதாகப் பயனர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
மின் விளையாட்டுகளை விளையாடும் போதோ மற்றவர்களிடம் தொலைபேசி அழைப்பு அல்லது பேஸ்டைம் வீடியோ மூலமாக பேசும் போதோ அவ்வாறு ஏற்படுவதாகப் பயனர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
கைத்தொலைபேசிகளில் உள்ள புதிய ஏ17 சில்லினால் பிரச்சனை ஏற்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளன.
புதிய சாதனங்களை பயன்படுத்தும் போதும் குறிப்பிட்ட சில செயலிகளை பயன்படுத்தும் போதும் அவ்வாறு நேர்வது வழக்கம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.