சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெற்றோல் உற்பத்தி பிரிவின் உற்பத்தியை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை இடைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடு இல்லாமல் பராமரிக்க தேவையான எரிபொருள் இருப்புக்கள் மற்றும் ஆர்டர்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.