கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80 சதவீத நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயற்பாடுகளை அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளுக்காக முதற்கட்டமாக 12 அதிநவீன பாரந்தூக்கிகளை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் செயலாளர் தெரிவித்துள்ளார்.