முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு எதிர்வரும் திங்கட் கிழமை ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இலங்கைக்கான முன்னாள் சுவிஸ்லாந்து தூதுவரும் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்குச் சென்று , இதுதொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு நானும் ஒரு கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன்.
சேனல் 4 வினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சட்டதரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். அதற்கமைய இந்த வழக்கை நவம்பர் மாதம் வரை வழக்கை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.