கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நுண்ணுயிர் கொல்லி மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தவரின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளருக்கு வழங்கப்பட்ட Co-amoxiclav என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்தின் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய விசாரணைகளின் பெறுபேறுகள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியும் என அவர் கூறியுள்ளார்.
வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெற்ற 50 வயதான நபரே நுண்ணுயிர் கொல்லி மருந்து வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.