கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த SJB யின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தன்னை தேசிய பட்டியல் ஊடாகவாவது மீண்டும் பாராளுமன்றம் அழைக்க வேண்டும் என SJB தலைவர்களிடம் வலியுறுத்தியதாக நேற்றைய தினம் ShortNews வெளியிட்ட செய்தியை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மறுத்துள்ளார்.
தான் SJB தலைவர்களிடம் அப்படியொரு வலியுறுத்தலை செய்யவில்லையெனவும் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்ட தவறான தகவலினால் இப்படியான செய்திகள் கூறப்படுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியானாலும், முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் இல்லாமை சமூகத்திற்கு பெரும் இழப்பாகியுள்ளதாக முஸ்லிம்கள் மத்தியில் பாரிய கருத்துருவாக்கம் ஒன்று உண்டாகியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.