Our Feeds


Wednesday, September 6, 2023

ShortNews Admin

VIDEO: இலங்கையிலிருந்து தப்பியோடிய CID அதிகாரி CHANNEL 4 வீடியோவில் சொன்னது என்ன?



கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இல்லாத காலத்திலும் லசந்த படுகொலை வழக்குகளை நீதிமன்றங்களில் முடக்கிவைப்பதற்கு உதவக்கூடிய பலர் உயர் பதவிகளில் இருந்தனர்  என சி.ஐ.டி.யின் முன்னாள் அதிகாரி நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.


சனல் 4 இன் வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தொடர்பான வீடியோவில் கோட்டாபாய ஜனாதிபதியான பின்னர் இலங்கையிலிருந்து தப்பியோடிய சிரேஸ்ட புலனாய்வு உத்தியோகத்தர் நிசாந்த சில்வாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிசாந்த சில்வா, அந்த படுகொலையை டிரிபோலி பிளாட்டுன் என்ற இராணுவபுலனாய்வு குழுவினர் செய்தமைக்கான தொலைபேசி ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இல்லாத போதிலும் (2015-2019 தேர்தல் வரை) லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்குகள் முடக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நண்பர்கள் உயர்மட்டத்தில் இருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »