Our Feeds


Thursday, September 7, 2023

ShortNews

VIDEO: முஸ்லிம் இளைஞர்களுக்கு இப்படியொரு பயங்கரமான தாக்குதலை நடத்தவே முடியாது - கர்தினால் மல்கம் ரஞ்சித்



ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னால் நான் கொச்சிக்கடை, கடுவாபிடிய மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களுக்க சென்ற நேரத்தில் இது போன்றதொரு பாரிய தாக்குதலை முஸ்லிம் இளைஞர்களினால் செய்ய முடியாது என்பதையும், இது திட்டமிட்ட வேலை என்பதையும் தெளிவாக புரிந்து கொண்டேன். என கொழும்பு ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.


CHANNEL 4 ஊடகம் வெளியிட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் பற்றிய சர்ச்சைக்குறிய வீடியோ தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்த இந்த காரியத்திற்கு பின்னால் ஏதோவொரு மறைகரம் செயல்பட்டுள்ளது என்ற சிந்தனைதான் அப்போது எனக்குத் தோன்றியது. 


ஏனெனில் இது நினைத்தவுடன் ஒரு இளைஞர் குழுவுக்கு செய்ய முடியுமான காரியமல்ல என்பதும் எமக்குத் தெளிவானது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »