எகிப்திய நகரமான இஸ்மாலியாவில் உள்ள பொலிஸ் வளாகத்தில்
இன்று(02) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 38 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.திடீரெனஅதிகாலை ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரங்களுக்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்குள் சுமார் 38 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பரவல் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.