ஹமாஸ் சிறைப் பிடித்த பணயக் கைதிகளில் 50 பேர் இஸ்ரேல்
தாக்குதலில் பலி!காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, சுமார் 50 இஸ்ரேலியப் பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் இராணுவப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுபற்றி, ஹமாஸ் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக, தங்கள் படையினரால் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த சுமார் 50 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர், என்றார்.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், பலரை சிறைபிடித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
