Our Feeds


Friday, October 27, 2023

News Editor

சீன முன்னாள் பிரதமர் காலமானார்


 சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் இன்று (27) அதிகாலை காலமானார். 


68 வயதுடைய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


லீ கெகியாங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். கட்சியில் செல்வாக்கு நிறைந்த அவரை சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற பின்னர் ஓரங்கட்டத் தொடங்கினார். 


இதனால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகியிருக்க நேர்ந்தது. பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஷாங்காய் நகரில் வசித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »