Our Feeds


Monday, October 16, 2023

ShortNews Admin

காசாவின் கழுத்துநெரிக்கப்படுவதால் உலகம் தனது மனிதாபிமானத்தை இழக்கின்றது - ஐ.நா அமைப்பு



காசாவின் கழுத்துநெரிக்கப்படுவதால் உலகம் தனது மனிதாபிமானத்தை  இழந்துவிட்டது என பாலஸ்தீன அகதிகளிற்கு ஆதரவளிக்கும்  ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.


யூஎன்ஆர்டபில்யூ அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி கிழக்கு ஜெரூசலேமில் இதனை தெரிவித்துள்ளார்.

குடிநீர் விடயத்தை பார்த்தால் குடிநீர் என்பது வாழ்;க்கை காசாவில் குடிநீர் முடிவடைகின்றது  காசா உயிரிழக்கி;ன்றது  என அவர் தெரிவி;த்துள்ளார்.

விரைவில் காசாவில் உணவும் மருந்தும் இருக்காது என நான் அஞ்சுகின்றேன் -கடந்த ஒரு வாரகாலமாக காசவிற்கு ஒரு துளி நீர் ஒரு துளி தானியம்  ஒரு லீற்றர் எரிபொருள் கூட அனுப்படவில்லை எனவும் ஐநா அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாரிய மனிதாபிமான துயரம் உருவாகின்றது ஒரு பகுதி கூட காசாவில் பாதுகாப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை கொலை செய்தமைக்கு பதில் பொதுமக்களை கொலைசெய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »