Our Feeds


Sunday, October 29, 2023

ShortNews

காஸாவுக்கு இணைய சேவை வழங்கினால் எலான் மாஸ்கின் ஸ்டார் லிங்கின் உறவுகளை துண்டிப்போம் - இஸ்ரேல் எச்சரிக்கை.



காஸா எல்லைப் பகுதியில் இணைய சேவைகளை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இஸ்ரேல் அரசு இறங்கி உள்ளது. இது குறித்து இஸ்ரேல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஷலோமா காரி வெளியிட்ட தகவலில், அவர் கூறியுள்ளதாவது,


காஸா பகுதியில் இணைய சேவையை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ளதால், ஸ்டார் லிங்க் உடனான அனைத்து தொடர்புகளும் முறியடித்துக்கொள்ளப்படும். காசாவில் இணைய சேவைகள் வழங்கும் நடவடிக்கையை முடக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, காஸா பகுதியில் 18 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான யாஹ்யா சின்வர் வெளியிட்ட அறிவிப்பில், ” இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு பதிலாக இஸ்ரேலிய ராணுவம் பிடியில் உள்ள தங்கள் போராளிகளை விடுவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »