அரசாங்கம் தேர்தல்களை பிற்போடும் நோக்கிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முயல்கின்றது என தெரிவிக்கப்படுவதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
இந்த சீர்திருத்தங்கள் தேர்தல்களை பிற்போடாது என குறிப்பிட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புள்ளவை இல்லை என விஜயதாச ராஜபக்ச சண்டேடைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
இது அச்சங்களை கொண்டுள்ள நாடு நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டுவந்தால் என்ன அவசரம் என கேட்பார்கள் தாமதித்தால் ஏன் சீர்திருத்தங்களை கொண்டுவர தாமதம் என கேட்பார்கள் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சீர்திருத்தங்கள் காரணமாக தேர்தல்களை பிற்போடாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படும் அவர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
