Our Feeds


Saturday, October 28, 2023

ShortNews

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் ஐ.நா தலையிட வேண்டும் - கர்தினால் மல்கம் ரஞ்சித் நேரடியாக கோரிக்கை.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான  விசாரணைக்கான இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முயற்சிகளிற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவளிக்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஆணையாளர் நடா அல் நசீவை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐ.நா வின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கர்தினாலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில் பெரேராவும் கலந்துகொண்டுள்ளார்.

நீதிக்கான எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் குறித்து ரணில் ராஜபக்ச அரசாங்கம் அலட்சியமாகயிருப்பதால் ஐ.நா தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »