Our Feeds


Saturday, October 21, 2023

ShortNews

BREAKING: எகிப்து - பலஸ்தீன் “ரபா போடர்” இன்று திறக்கப்படலாம்.



காசா-எகிப்து எல்லையிலுள்ள ரஃபா கடவை இன்று (21) திறக்கப்படலாம் என இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை வெளிநாட்டவர்கள் முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பகுதியை விட்டு வெளியேற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு சமூக ஊடக இடுகையில் தூதரகம், ரஃபா கடவை அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (0700GMT) திறக்கும். எனினும் வெளிநாட்டு குடிமக்கள் காசாவை விட்டு வெளியேற எவ்வளவு நேரம் கடவை திறந்திருக்கும் என்பது தெரியாது என தூதரகம் தெரிவித்துள்ளது.


காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் தண்ணீருடன் சுமார் 175 ட்ரக்குகளில் எகிப்தின் ரஃபா எல்லைக்கு அருகில் காத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »