Our Feeds


Tuesday, October 10, 2023

ShortNews

JUST_IN: இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்



இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார்.


அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.


இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகைதந்து இந்தக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »