இலங்கையில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள நாடுகளில் உலகின் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரிழிவு நோய்த் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
