Our Feeds


Monday, November 27, 2023

ShortNews

3 மாதகாலத்துக்கு தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசாங்கம் உத்தேசம்.



சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆரம்பத்தில் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ்மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவார் என தெரியவருகிறது.


முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தது.


தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகவுள்ள மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »