Our Feeds


Thursday, November 30, 2023

ShortNews

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் ஜெரோம் பெர்னாண்டோ...




போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (30) காலை இன்று

காலை முதல் 08 மணிநேரம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், பிற்பகல் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.


மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நேற்று (29) இலங்கை திரும்பினார்.


அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், அவர் நாடு திரும்பி 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்குமாறு அவருக்கு அண்மையில் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்து.


அந்த உத்தரவின் படி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »