Our Feeds


Tuesday, November 28, 2023

ShortNews

வடிவேல் சுரேஷின் பதவிக்கு ஆப்படித்த சஜித் - நடந்தது என்ன?



பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார்.


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.


இதன்படி வெற்றிடமான பசறை தொகுதி அமைப்பாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.


கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய் பெற்றுக்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், உரிய பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், பசறை இளைஞர்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »