ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21) விமானம் கொண்டு வரப்பட்டதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
இந்த விமானத்தின் மூலம் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் மற்றொரு ஏர்பஸ் ஏ-330 விமானத்தையும், மார்ச் மாதத்தில் மற்றொரு ஏர்பஸ் விமானத்தையும் குத்தகை அடிப்படையில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பாவனையில் இல்லாத 02 விமானங்களுக்கு இரண்டு இயந்திரங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.