மகல்தெனிய வயமுடுக்குவ சந்திக்கு அருகில் உள்ள கால்வாயில் சிசு ஒன்றின் சடலம் கிடப்பதாக லியாங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்து ஒரே நாளான சிசுவின் சடலம் கால்வாயில் கிடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்ட போது குறித்த சிசு சிதைந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிசுவை யாரேனும் ரகசியமாக பிரசவித்து கால்வாயில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது