Our Feeds


Friday, December 22, 2023

SHAHNI RAMEES

பிரயோசனமுள்ள பிரஜைகளாக உருவாக்கும் நோக்கில் கம்பளையில் ஊடக செயலமர்வு

 



பிரயோசனமுள்ள பிரஜைகளாக உருவாக்கும் நோக்கில்

கம்பளையில் ஊடக செயலமர்வு 


மாணவர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களை பிரயோசனமுள்ள பிரஜைகளாக உருவாக்கும் நோக்கில் கம்பளை அல் ஹிக்மா பாடசாலையில் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த செயலமர்வில் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் தலைவரும் பயிற்றுவிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் பிரதம விரிவுரையாற்றினார்.


மாணவர்களின் வாழ்கையில் ஏற்படும் சவால்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஊடகத்தின் முக்கியத்துவம் அதனது பெறுமதி போன்ற பல விடயங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டன.

குறித்த செயலமர்விற்கு பக்கத்து பாடசாலைகளும் அழைக்கப்பட்டிருந்ததோடு மாணவர் ஊடகப் பிரிவின் உருவாக்கம் குறித்தும் பேசப்பட்டதுடன் அதன் அங்குரார்பண நிகழ்வு வெகு விரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


நிகழ்வில் அல் ஹிக்மா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம் நுஃமான் மற்றும் ஆசிரியர்களான ரிஸ்வி, அப்ரா அஹமட் ஆகியோரும் கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயம், அல் மினா முஸ்லிம் வித்தியாலயத்தை சேர்ந்த ஆசிரியர்களும் ஜே.எம் மீடியா குழு உறுப்பினர்களான அப்துல் ரஹீம், இஸ்சத் நிசார், மபாஸ் முசம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாமல் இதர இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் இவ்வாறான பாடசாலைகளை நாம் பாராட்டவதுடன் அவ்வாறான பாடசாலைகளுக்கு எமது முழுமையான உதவிகளை வழங்கவும் ஜே.எம் மீடியா கல்லூரி (JM Media College - ⁨077 712 8348⁩) தயாராக இருக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »