Our Feeds


Wednesday, December 13, 2023

ShortNews

வெல்லம்பிட்டிய மைதானத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு - தப்பிய உடற்பயிற்சி ஆசிரியர் - நடந்தது என்ன?



வெல்லம்பிட்டிய உமகிலிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், துப்பாக்கி வெடிக்காததால் அவரது உயிர் தப்பியதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வெல்லம்பிட்டிய ஸ்ரீ ஆனந்தராம மாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவர் மீதே துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நண்பர்களை சந்திப்பதற்காக உமகிலிய மைதானத்திற்கு அருகில், வெள்ளை ஹெல்மெட் அணிந்து, கருப்பு நிற மோட்டார் சைக்கிளில், கறுப்பு ஜாக்கெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »