Our Feeds


Wednesday, January 3, 2024

SHAHNI RAMEES

பிரித்தானியா, வட அயர்லாந்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

 

கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைப்பதற்காக இலங்கை, பிரித்தானியா, மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 

பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் தற்போது கடல் ஆரோக்கியம் குறித்த உலகளாவிய முயற்சிகளில் முன்னணியில் உள்ளன என்று அரசாங்கம் கூறுகிறது.

 

அதன்படி, 2013 ஆம் ஆண்டுக்குள் உலகப் பெருங்கடலில் குறைந்தபட்சம் 30% பாதுகாக்கப்படுவதற்கும், கடல் பாதுகாப்பு மற்றும் நிலையான நீலப் பொருளாதாரத்தை அடைவதற்கு 500 மில்லியன் யூரோ "ப்ளூ பிளானட்" நிதியை நிறுவுவதற்கும், கூட்டு நாடுகளுக்கு தேவையான நிதிகளை வழங்குவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

ஐக்கிய இராச்சியத்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறையானது "ப்ளூ பிளானட்" நிதியத்தின் லட்சியத்தை அடைய இருதரப்பு மற்றும் பலதரப்பு மட்டங்களில் திட்டங்களை வடிவமைத்துள்ளன.

 

அந்தத் திட்டங்களில் ஒன்றான கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் கீழ் ஆதரவைப் பெறத் தகுதியான நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »